அமைச்சர் மனோ கணேசன் விசேட அறிவிப்பு

உங்கள் ஊர் தேடி வரும், இந்து – சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை, முதற்கட்டமாக கொழும்பிலும், அதனைத்தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் நடத்தப்படும் என, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.


இது தொடர்பில், அவர் ஊடங்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

எமது தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால், ‘உதயம் – மக்கள் சேவை – உங்கள் ஊர் தேடி வரும் அரச சேவை’ என்ற பெயரில் நடத்தப்படும், இந்த இந்து – சைவ மறுமலர்ச்சிக்கான நடமாடும் சேவை, முதலில் கொழும்பு மாவட்டத்தில் பின்வரும் மூன்று இடங்களில், அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் நடைபெறும்.

கொழும்பு வடக்குக்கான முதலாம் சேவை, 10-08-2019 அன்று சனிக்கிழமை முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 4.00 மணி வரை, கொழும்பு வடக்கு – நாவலர் மண்டபத்திலும்,

கொழும்பு தெற்குக்கான இரண்டாம் சேவை 17-08-2019 சனிக்கிழமை முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 4.00 மணி வரை, கொழும்பு தெற்கு – சரஸ்வதி மண்டபத்திலும்,

அவிசாவளைக்கான மூன்றாம் சேவை, 18-08-2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 முதல் பிற்பகல் 4.00 மணி வரை, அவிசாவளை – புவக்பிட்டிய சீ.சீ தமிழ் வித்தியாலயத்திலும் நடைபெறும்.

இதையடுத்து ஏனைய மாவட்டங்களிலும், இந்து – சைவ நடமாடும் சேவை நடைபெறும்.
இவற்றுக்கான திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இந் நடமாடும் சேவையில் பெறக்கூடிய சேவைகள் பல உள்ளன.
• இலங்கை தேசிய இந்து மகா சபை உருவாக்கம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துதல்.
• இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், இந்து அறநெறிப் பாடசாலைகள், தமிழ்க் கலை மன்றங்கள் என்பவற்றை பதிவு செய்தல்.
• இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், இந்து அறநெறிப் பாடசாலைகள், தமிழ்க் கலைமன்றங்கள் என்பவற்றின் தகவல்களைப் பெறுதலும் மீள்பதிவு செய்தலும்.
• இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், இந்து அறநெறிப் பாடசாலைகள், தமிழ்க் கலை மன்றங்கள் என்பவற்றின் நிர்வாக நிதி நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்கல்.
• இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், இந்து அறநெறிப் பாடசாலைகள் என்பன எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிணக்குகளுக்குத் தீர்வு காணல்.
• இந்து அறநெறிப் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குதல்.
• இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் தகவல்களை பெறுதலும் பதிவு செய்தல்.
• இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்.
• இந்து அறநெறிப் பாடசாலைகளுக்குப் புதிதாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளல்.
• இந்து குருமார்களின் தகவல்களை பெறுதலும் பதிவு செய்தல்.
• இந்து குருமார்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்.
• தமிழ் கலைஞர்களின் தகவல்களை பெறுதலும் பதிவு செய்தல்.
போன்ற சேவைகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், இது தொடர்பான மேலதிக தகவல்களை, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளரிடம் 011 2552641 தொலைபேசி இலக்கம் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.
என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!