மட்டு, போதனா வைத்தியசாலையில், மருந்துப் பற்றாக்குறை நிவர்த்தி

கடந்த ஐந்தாம் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் கே.எம்.ரூபராஜன் 45 க்கு மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தட்டுபாடு நிலவுவதாக தெரிவித்திருந்தார்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற அத்தியாவசிய மருந்து வகைகளின் தட்டுபாடு தொடர்பாக கடந்த இரு தினங்களாக டான் செய்தி சேவை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கத்தை சந்திக்க முயற்சி செய்தது.

அந்த வகையில் இன்று மேற்கொண்ட பிரத்தியோக சந்திப்பில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற மருந்து வகைகளின் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகைளில் வைத்தியசாலைக்கு தேவைப்படுகின்ற மருந்துகளை வெளி மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து பெற்றுக் கொள்ளுவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்திய சாலைகளிலும் இவ்வாறான மருந்து வகைகள் தற்போது தட்டுபாடுகள் நிலவி வருகின்றது.

இந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற மருந்து வகைகளின் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகைளில் வைத்தியசாலைக்கு தேவைப்படுகின்ற மருந்துகளை வெளி மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து பெற்றுக்கொள்ளுவதாகவும் அதேவேளை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனுமதியுடன் வழங்கப்படுகின்ற நிதியினைக்கொண்டு உள்ளுர் தனியார் மருந்தகங்களில் இருந்து மேலதிக மருந்துகளை பெற்று வைத்தியசாலையில் நிலவுகின்ற மருந்து பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக நேரடியான தகவல்களை ஒளிப்பதிவு செய்ய டான் செய்தி சேவை முயற்சித்த வேளை இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் சுகாதார அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு ஏற்ப, ஒளிப்பதிவுகள் மூலம் தகவல்கள் எதனையும் வழங்க அனுமதி வழங்கப்படவில்லை என, வைத்திய பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!