லங்கா சமசமாய கட்சியின் ஆலோசனை அறிக்கை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பு.

நாட்டில் ஐக்கியத்துடன் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையினை லங்கா சமசமாய கட்சி எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளித்துள்ளது.

லங்கா சமசமாய கட்சி உறுப்பினர்கள் கூடி நாட்டில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆலோசனைக் கூட்டத்தினை நடாத்தியிருந்தனர். அதில் எடுக்கப்பட்ட தீhமானங்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையினை எதிர்க்கட்சித் தலைவரிடம் வழங்கியுள்ளனர்.

கொழும்பு திஸ்ஸமகாராமயவில் எதிர்கட்சித் தலைவரை பேராசிரியர் திஸ்ஸவிதாரண தலமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இனங்களுக்குள் நல்லிணக்கம் போன்றவற்றிற்கு எவ்வாறு ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின் முடிவில் திஸ்ஸவிதாரணவினால் லங்கா சமசமாய கட்சியின் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையும் கையளிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!