நீர்கொழும்பு மாநகர சபை எதிர்கட்சி தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு

நீர்கொழும்பு கட்டானையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும், நீர்கொழும்பு மாநகர சபை எதிர்கட்சி தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்ணான்டோவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


கடந்த மார்ச் மாதம் கட்டானை பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பாக, கடந்த மாதம் 8 ஆம் திகதி நீர்கொழும்பு நகரத்தில் வைத்து கட்டான பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், நீர்கொழும்பு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்து நிலையில், குறித்த வழக்கு இன்று மீண்டும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில், மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது, ரொய்ஸ் விஜித பெர்ணான்டோவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, நீர்கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!