நுவரெலியா ஹட்டன் ஸ்டெதன் தோட்டப் பகுதியில், வீடு ஒன்றுக்குள் அத்துமீறி சென்று, வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தியதாக கூறப்படும் 12 சந்தேக நபர்கள், ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு, ஸ்டெதன் தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விருந்துபசாரம் இடம்பெற்றது.
இதன் போது, விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட குழுவினருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக, வீட்டின் உரிமையாளர் முத்துகிருஷ்ணன் தடியால் தாக்கப்பட்ட நிலையில், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் ஏன் முறைப்பாடு பதிவு செய்தீர்கள் எனக்கூறி, மீண்டும் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு சென்ற குழுவினர், வீட்டையும் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொருக்கியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன் போது, 12 பேர கொண்ட குழுவினர், வீட்டை சேதப்படுத்தியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள், ஹட்டன் ஸ்டெதன் பகுதி மற்றும் ஹட்டன் குடாகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. (சி)