நுவரெலியா, மௌசாகலை நீர்த்தேக்கத்தில் விடப்பட்ட, இறால் குஞ்சுகள்

நுவரெலியா மஸ்கெலியா மௌசாகலை நீர்த்தேக்கத்தில், 2 இலட்சத்து 60 ஆயிரம் இறால் குஞ்சுகள், இன்று விடப்பட்டுள்ளன

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வேலைத்திட்டத்தின் கீழ், நுவரெலியா நன்னீர் மீன் வளர்ப்பு தினைக்களத்தினால், மஸ்கெலியா மௌசாகலை நீர்த்தேக்கத்திற்கு இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட மக்களின் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, ஜனாதிபதியால் தொடர்ந்தும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, நுவரெலியா மாவட்ட நன்னீர் மீன் வளர்ப்பு திணைக்கள அதிகாரி குஷான் புத்திக்க குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!