வவுனியாவில், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுழற்சி முறையிலான போராட்டம், இன்றுடன் 900 நாட்களை எட்டியுள்ளது.
உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் இடத்தில் இருந்து, கண்டி வீதி வழியாக பேரணியாக சென்ற காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, அங்கிருந்து கடை வீதி வழியாக, போராட்ட இடத்தை சென்றடைந்தனர்.
இதில், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவை சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டனர்.
இதன் போது, அமெரிக்க மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும், மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். (சி)