ஜனாதிபதி மைத்திரி கம்போடியாவில்!

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும், கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவிற்கு நான்கு நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கம்போடிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில் கம்போடியாவிற்கு பயணமான ஜனாதிபதி இன்று முற்பகல் புனோம் பென் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதியை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் மற்றும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, கம்போடியா நாட்டின் மன்னிர சந்திக்கவுள்ளதுடன், கம்போடியாவின் பிரதமர் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் பௌத்த சமய தொடர்புகளை விரிவுபடுத்துவது பற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், இவை தொடர்பான புதிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

இதேவேளை ஜனாதிபதி இன்று பிற்பகல் இலங்கை கம்போடிய வர்த்தக மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!