சுஸ்மாவின் உடலுக்கு மோடி அஞ்சலி!

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாரதீய ஜனதாக கட்சியின் மூத்த உறுப்பினருமான சுஸ்மா சுவராஜின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நேற்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலயங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், சுஸ்மா சுவராஜ் உயிரிழந்த தகவல் அறிந்து பாராதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் வைத்தியசாலையில் திரண்டிருந்தனர்.

இதனிடையே, நள்ளிரவு டில்லி ஜன்பாத் பகுதியில் உள்ள சுஸ்மா சுவராஜின் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது.

தொடர்ந்து அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சுஸ்மா சுவராஜின் இல்லத்திற்கு சென்று கண்ணீர் மல்க அவரது உடலிற்கு அஞ்சலிசெலுத்தியிருந்தார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!