ஆகஸ்ட் 15இல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு!

புலமைப்பரிசில் பரீட்சை வினாத் தாள்களை மதிப்பிடும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைய வினாத்தாள்கள் மதிப்பிடும் பணி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

39 பாடசாலைகளில் 436 மதிப்பீட்டு சபையின் கீழ் நடைபெறவுள்ள இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகளில் 6,976 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.

இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை விபரங்களையும் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!