ரொக்கட் ஒன்றினை உருவாக்கிய கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய மாணவன் கிஹான் காவிந்த ஹெட்டியாரச்சி, ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.
கம்பஹா பண்டாரநாயக வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுடன் இணைந்ததாக இடம்பெற்ற கண்காட்சியில் ரொக்கட் ஒன்றினை குறித்த மாணவன் காட்சிப்படுத்தியிருந்தார்.
குறித்த கண்காட்சியைப் பார்வையிட்ட ஜனாதிபதி, மாணவனின் திறமைகளை பாராட்டியதுடன், அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக ஆரம்ப கட்டமாக 10 இலட்சம் ரூபாவினை கடந்த ஒக்டோபர் மாதம் வழங்கி வைத்தார்.
ரொக்கட்டை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான உதவியை வழங்குமாறும் ஜனாதிபதி விமானப்படை தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், ரொக்கட் ஒன்றினை உருவாக்கிய கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய மாணவன் கிஹான் காவிந்த ஹெட்டியாரச்சி, ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், தற்போது ரொக்கட்டின் முன்னேற்ற நிலைமை பற்றியும் எதிர்கால திட்டம் பற்றியும் ஜனாதிபதிக்கு விளக்கப்பட்டதுடன், இதற்குத் தேவையான உதவிகளை தொடர்ந்தும் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், எயார் வைஸ் மார்ஷல் எம்.டீ. ரத்நாயக ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.(நி)