யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நபர், வீட்டில் ஏற்பட்ட தகராறு ஒன்றினையடுத்து, தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்துகொள்ள முயன்றவேளை, காப்பற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் மேற்கினைச் சேர்ந்த 60 வயதுடைய இராசதுரை பாக்கியராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 10 வருடத்திற்கு முன்னர் சுவிஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு திரும்பியவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உயிரிழந்தவரின் இறப்பு தொடர்பில் விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு அலுவர் நவசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.(நி)