நல்லூரில் ‘சைவம் தழைத்தோங்க’ டான் ரீவியின் சிறப்பு வளாகம் திறப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை சிறப்பிக்கும் முகமாக சைவம் தழைத்தோங்க எனும் அரங்குடன் இணைந்த டான் வளாகம் திறக்கப்பட்டுள்ளது.

சைவமும் தமிழும் கலந்திருக்கும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு, சைவத் தமிழ் பாராம்பரியங்களை வெளிக்காட்டும் வகையில் சைவம் தழைத்தோங்க எனும் சிறப்பு அரங்கத்துடன் கூடிய டான் வளாகம் திறக்கப்பட்டுள்ளது.

டான் சிறப்பு வளாகத்தில் யாழ்ப்பாண தமிழ்ச்சங்கத்தினருடன் இணைந்து, திருவிழா தினங்களில் மாலை 7 மணியளவில்
வினாடிவினா போட்டியும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், நல்லூர் ஆலய வளாகத்தில் நல்லை ஆதீனத்திற்கு அருகில் டான் வளாக திறப்பு விழா நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சின்மயா மிசன் சுவாமிகள் சிதாகாசானந்தா, யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்க தலைவர் ச.லலீசன், விரிவுரையாளர் சர்வேஸ்வரா, மதுரகவி காரை அருளானந்தம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கே.சயந்தன், டான் தொலைக்காட்சி குழுமத்தினர், கலை நிகழ்வுகளை ஆற்றுகை செய்யவருகை தந்த பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனடிப்படையில் சைவம் தழைத்தோங்க அரங்க திறப்பு விழா நிகழ்வில் மதகுருக்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து சைவம் தழைத்தோங்க அரங்கில் முதல்நாள்; கலைநிகழ்வுகளை வழங்குவதற்காக வருகை தந்திருந்த பாடசாலை சிறுவர்கள் மற்றும் கலைஞர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்புறமாக பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நல்லை ஆதீனத்திற்கு அருகில் அமையப்பெற்ற எமது நல்லூர் ஆலய சிறப்பு வளாகத்திலிருந்து, தினந்தோறும் இரவு 7மணி முதல் 9 மணிவரை ஓம் தொலைக்காட்சியின் ஊடாக நேரலையாக கலை நிகழ்வுகள் ஒளிபரப்பப்படவுள்ளன.

ஆன்மீகம் சார் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள விரும்புவோர் தமது பெயர்களை, எமது வளாகத்தில் பதிவு செய்வதன்மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!