முல்லைத்தீவு – வவுனிக்குளம் நன்னீர் மீனவர்கள், வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையினால், அந்த குளத்தின் கீழான நன்னீர் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சி காரணமாக முல்லைத்தீவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் நீர்வற்றிக்காணப்படுவதுடன், அதன் கீழான போகப்பயிர் செய்கைகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வவுனிக்குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படும் நிலையில், அந்த குளத்தின் கீழ் காலபோக பயிர்செய்கையின் பின்னர், சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான நீர்விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதனால், குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்து நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட 180 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொழில் இன்மையால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள், தமக்கு நிவாரணங்களை பெற்றுத்;தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.(நி)