வசந்த கரன்னாகொட மற்றும் ரொஷான் குணதிலக ஆகியோர் தரம் உயர்த்தப்பட்டனர்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக ஆகியோர் தமது பதவி நிலைகளில் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (06) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை கடற்படைத் தளபதியாக பணியாற்றிய வசந்த கரன்னாகொட, கடற்படையின் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார்.

இதேவேளை, 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய ரொஷான் குணதிலக, விமானப்படை சீப் மார்ஷலாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!