டிலும் அமுனுகம மட்டக்களப்பிற்கு கள விஜயம்!

பாராளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம மட்டக்களப்பிற்கு கள விஜயம் மேற்கொண்டார்.

ஸ்ரீ லங்கா மக்கள் முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம, மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள கதிரவெளி கிராமத்திற்கு நேற்று கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

குறித்த பிரதேச மக்கள், அக்கட்சியின் மாவட்ட இளைஞர் அணித்தலைவர் த.ஹரிம் பிரதாப் ஊடாக விடுத்த வேண்டுகோளை அடுத்து அவர் கதிரவெளி கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட விடயங்களை பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர்.

குறிப்பாக கதிரவெளி பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் இல்மனைட் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்தி தருமாறு பல கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தும் பலன் ஏதும் கிடைக்கவில்லையென மக்கள் தெரிவித்தனர். அத்துடன் கதிரவெளி கடலில் சட்ட விரோத சுருக்கு வலை மீன் பிடித்தலில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் தங்களது மீன்பிடித் தொழில் பாதிப்படைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

விடயங்களை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், இல்மனைட் தொழிற்சாலை அமைக்கும் விடயம் தொடர்பாக மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றில் உரை நிகழ்த்தி அதனை தடுக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக மக்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு உறுதுணையாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இத்திட்டத்திற்கு பதிலாக பிரதேச மக்கள் விரும்பும் ஆடைத் தொழிற்சாலை போன்ற திட்டங்களை ஏற்படுத்தி வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!