மேற்கிந்தியாவை இந்திய 7 விக்கெட்டுக்களால் வென்றது

இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 க்கு 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை இந்திய அணி 3க்கு 0 என கைப்பற்றியுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி  முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் சார்பில் கிர்ரன் பொலார்ட் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில் 147 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.1 ஓவர் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து 150 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் ரிசப் பாண்ட் 65 ஓட்டங்களையும் விராட் கோலி 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக தீபக் சாஹர் தெரிவானார்.இந்தநிலையில் தொடர் ஆட்டநாயகனாக குர்னல் பாண்டியாவும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!