இந்திய இந்து தமிழர் கட்சி கோரிக்கை!

காஸ்மீர் விவகாரம் தொடர்பில் இந்திய நாட்டை இழிவுபடுத்திய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்து தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், இந்திய மக்களின் ஜனநாயக தேர்வினை, காவி ஆட்சி என குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மீது இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து தமிழர் கட்சியின் தலைவர் இராம இரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய இறையாண்மையை, அவமதித்தமையை கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இராம இரவிக்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழ் மக்களின் 30 வருட கோரிக்கையான கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை, தனது இனவாத பேச்சின் மூலம் தடுத்துவரும் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி, இலங்கையில் தமிழ் மக்களை அடக்கிக்கொண்டு இருக்கின்றார்.

இலங்கையில் இனவாதம் கக்கிய அவர் தற்போது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் உரையாற்றியுள்ளார்.

அத்தோடு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, எமது பாரத அரசையும் பாரத பிரதமரையும் கொச்சைப்படுத்தியும், பாராத மக்களின் ஜனநாயக தேர்வை காவி ஆட்சி என்றும், வடக்கில் காஸ்மீர் மாநிலத்தில் ஜிகாத் செய்துகொண்டு இருக்கும் முஸ்லிம் சகோதர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகின்றது என்றும் குறிப்பிட்ட அவரை இந்து தமிழர் கட்சி கண்டித்து நிற்கின்றது.’

அத்தோடு, இலங்கை கல்முனை தமிழர்களை அடக்கி இந்து ஆலயத்தின் வீதி பெயரான தரவைப் பிள்ளையார் வீதியை, கடற்கரை பள்ளிவாசல் வீதி என சட்டத்துக்கு முரணாக மாற்ற நினைக்கும் இந்து விரோதி இவரை வன்மையாகக் கண்டிக்கின்றோம்’ எனவும், பாராத அரசும், இலங்கை அரசும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து தமிழர் கட்சியின் தலைவர் இராம இரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!