ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமாசிங்க மற்றும் அக் கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 09 மணியளவில் அலரிமாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இருவருக்கும் இடையில் இரு மணித்தியாலங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வேட்பாளர் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.(சே)