மோடிக்கு ரணில் பாராட்டு

இந்தியாவில் லடக் பிரதேசத்தை தனியான மாநிலம் என்ற ரீதியில் பெயரிடுவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், லடக் பிரதேசத்தில் 100 க்கு 70 சதவீதமான பௌத்த மக்கள் வாழ்வதானால் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இந்த உள்ளக தீர்மானத்துடன் பௌத்தர்களை பெரும்பாண்மையாக கொண்ட முதலாவது இந்திய பிராந்தியமாக லடக் இடம்பெற்றுள்ளது.

தாம் லடக் பிரதேசத்திற்கு விஜயம் செய்திருப்பதாகவும் அதன் இயற்கை எளிலை சிறப்பான முறையில் அனுபவித்ததாகவும் தெரிவித்து அவர், சுற்றுலாப்பயணத்தை மேற்கொள்வதற்கு பொருத்தமான இயற்கை எளில் மிக்க பிராந்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!