பல இடங்களில் மழை-நாட்டின் இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் (மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையும்) காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பிரதேசகளில் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல்,சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மன்னார்,யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல்,மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும்கொந்தளிப்பாகவும் அவ்வப்போது உயர் அலைகளுடனும் காணப்படும்.

2019 ஓகஸ்ட் 09 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என்பது மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவுஊடாக திருகோணமலைவரையான கடற்பரப்புகளிலும் பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவுஊடாக திருகோணமலைவரையான கடற்பரப்புகளில் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 80 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!