யாழ், சுண்ணாகம் பகுதியில் கடும் காற்று : வீடுகள் சேதம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில், இன்று வீசிய கடும் காற்றினால் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுன்னாகம் கந்தரோடை மடத்தடிப் பகுதியில், கடும் காற்றினால், தென்னை மரம் ஒன்று வீடொன்றின்மேல் சாய்ந்து வீழ்ந்ததில், வீட்டின் கூரைப்பகுதி பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இச்சம்பவத்தில், வீடு பாதிப்புக்கு உள்ளாகியது.

இதேவேளை, சுன்னாகம் பிரதேசத்தில் வேறு சில வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கிய எறியப்பட்டுள்ளதுடன், வேலிகளும் சாய்ந்துள்ளன.

நாட்டின் பல பகுதிகளிலும் வீசும் காற்று இன்று கடுமையாக வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் காற்றினால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!