ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் மனம் திறந்தார் தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை களமிறக்கும் நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாக, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பல தரப்பிலும், பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.

எனினும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இது குறித்து தனது தீர்வை தெரிவிக்கதாதால், தீர்க்கமாக எதையும் கூற முடியாதுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு, ஜனாதிபதியை நீதிமன்றத்தை நாடுமாறு தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

டிசம்பருக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாவிட்டால், தான் பதவி விலகுவதாகவும் கூறியிருக்கிறார்.
இது குறித்தும் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

அரச அதிகாரிகள் முதற்கொண்டு அனைவரையும் தாமாக பதவி விலகும் நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளியுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!