போக்குவரத்து துறையை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழ். பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை ஆகிய மூன்று விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மூன்று கட்டமாக இடம்பெறவுள்ள இந்த விமான நிலையங்களின் அபிவிருத்திப் பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மத்தள விமான நிலையத்தின் சேவைகளைப் துரிதப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்திய அரசாங்கத்துடன் முன்னெடுத்து வருகின்றோம்.
போக்குவரத்துத் துறையை துரிதப்படுத்துவதற்காக, கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்த வேலைத்திட்டங்களோடு, இன்னும் புதிய வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகரத்திற்கான புகையிரத சேவைகளை துரிதப்படுத்துவதற்கான பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியை வழங்கவுள்ளது.
அதேபோன்று, கண்டி நகரத்திற்கான புகையிரத சேவைகளும் குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்படும்.
என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். (சி)