மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில், குஞ்சுக்குளம் பகுதிக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில், ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன், இன்று காலை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட நிவையில், 6 பொதிகளைக் கொண்ட, சுமார் 8 கிலோ 6 கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சா பொதிகளுடன், குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள கஞ்சா பொதிகள், மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மடு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)