ஆட்சி மாற்றத்தால் அரசியல் தீர்வு : மஹிந்த

அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை, தவிர்த்துக் கொள்ள வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவருக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று இரவு, கொழும்பில் விஜயராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் இடம்பெற்ற வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உட்பட, அனைத்து தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு, நிச்சயம் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து தீர்வு முன்வைக்கப்படும்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுவதற்காக, நடப்பு அரசாங்கம் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இதுவரையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் வெற்றி இலக்கினை மாத்திரம் இலக்காக கொண்டு, தமிழ் மக்களிடம் போலியான வாக்குறுதிகளை வழங்குவதை அனைத்து அரசியல்வாதிகளும் முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். என மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!