பதக்கம் வென்றவர்களுக்கு வீடுகள் அமைப்பு

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க, அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.


சீனாவில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற, நுவரெலியா லபுகலை தோட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் ஈராக்கில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வெலிஓயா தோட்டத்தை சேர்ந்த சண்முகேஸ்வரனுக்கும் வீடுகளை நிர்மாணிக்க, மலைநாட்டு புதிய கிராமங்கள்
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.


நாட்டிற்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்த, ராஜ்குமார் மற்றும் சண்முகேஸ்வரன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று இடம்பெற்றது.

இதன் போது, ராஜ்குமார் மிஸ்டர் மலையகம் எனவும், சண்முகேஸ்வரன் ஹோர்ஸ் ஒப் மலையகம் எனவும் பெயர்சூட்டி கௌரவிக்கப்பட்டனர்.


அத்துடன், 7 பேர்ச் காணியில், 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டை நிர்மாணிப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதங்கள், இருவருக்கும் வழங்கி வைக்கப்பட்டன.


நிகழ்வில், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா, மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ராம், சரஸ்வதி சிவகுரு, அமைச்சரின் இணைப்பு செயலாளர் ஜி.நகுலேஸ்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!