மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில், மன்றத்தின் வேலைத் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு, இன்று நடைபெற்றது.
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில், உதவிப் பணிப்பாளர் யு.எல்.ஏ.மஜீத் தலைமையில் விளக்கமளிக்கப்பட்டது.
இதன் போது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக, மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில், மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய 5 பிரதேச செயலக பிரிவுகளிலும், இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சகல விதமான வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அத்துடன், 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் பதிவு செய்யப்பட்ட, 167 இளைஞர் கழகங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
விளையாட்டு நிகழ்வுகள் உட்பட, இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து விடயங்கள் தொடர்பாகவும், ஊகடவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ஊடக சந்திப்பில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராசா, இளைஞர் சேவை அதிகாரி ஏ.டியூக் குரூஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். (சி)