நீர்கொழும்பில் பதற்ற நிலை நீங்கியுள்ளது.

நீர்கொழும்பில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலை, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் விஜயத்தை அடுத்து நீங்கியுள்ளது.


புனித செபஸ்தியன் சிலைக்கு சிலர் சேதம் விளைவித்ததை அடுத்து, மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
பின்னர் அங்கு விரைந்த, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


அமைதியாக செயற்பட வேண்டும் எனவும், இது குறித்து உயர் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்ததை அடுத்து, மக்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!