பாராளுமன்ற அமர்வு, நாளை மதியம் வரை ஒத்திவைப்பு

ஆகஸ்ட் மாத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு, இன்று பிற்பகல் 1.00 மணியளவில், சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் ஆரம்பமானது.


இதில், இலங்கை மின்சார சபை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்ட போது, இது அரசியல் யாப்பிற்கு விரோதமானது, இதனை இரத்துச் செய்து கலந்துரையாடல்களை நடாத்தியன் பின்னர் பாராளுமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என, எதிர்கட்சித் தலைவர் மகிந்தராஜபக்ச கோரிக்கை விடுத்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சபைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல, பாராளுமன்றத்தினை நாளை பிற்பகல் 1.00 மணிக்கு ஒத்திவைக்க சபாநாயகர் இடத்தில் கோரியதனை அடுத்து, பாராளுமன்றத்தினை நாளை பிற்பகல் 1.00 மணி வரை ஒத்திவைப்பதாக, சபாநாயர் அறிவித்தார்.

இங்கு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்….

நாடாளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை திருத்தச் மசோதா அரசியல் யாப்பிற்கு முரணானது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் சபாநாயர் உங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த மசோதாவிற்கு இலங்கை மின்சார வாரிய பொறியியலாளர் சங்கமம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இதில் அதிகாரங்கள் முழுவதும் அமைச்சரின் கையில் செல்லுகின்றது. அவர் விரும்புவது போல செயற்படுவதற்கான அதிகாரம் கிடைக்கின்றது. எனவே தொடர்ந்தும் இந்த அமைச்சர் பதவியில் இருப்பார் என்று இல்லை அமைச்சர்கள் மாறிமாறி வருவார்கள்.

எனவே இதனை இந்த நிலையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது சரியல்ல என்று நான் நினைக்கின்றேன்.

இந்த சட்டத்திற்கு நாம் எமது எதிர்ப்பை வெளியிடும் அதேவேளை, உடனடியாக இன்று இதனை இரத்துச் செய்ய வேண்டும் என அரசாங்கத் தரப்பிடம் கோரிக்கை விடுகின்றேன்.

இந்த மசோத தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்களை நடாத்தி பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றாலம் என எதிர்பார்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!