நாவலப்பிட்டியில், உயிருடன் பிடிக்கப்பட்ட சிறுத்தை

நுவரெலியா நாவலப்பிட்டி பகுதியில் பொதுமக்களினால் தயாரிக்கப்பட்ட கூட்டின் உதவியுடன், சிறுத்தைப்புலி ஒன்று இன்று அதிகாலை மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.


கடந்த 3ஆம் திகதியும் இதேபகுதியில் சிறுத்தைப்புலி குட்டியொன்று பிடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக நாவலப்பிட்டிப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்ட நிலையிலேயே, பொது மக்கள் தமது கால்நடைகளை பாதுகாக்கும் நோக்கில், சுயமாக தயாரித்த கூடுகளின் உதவியுடன் சிறுத்தைப்புலிகளை  பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனடிப்டையில் இன்று அதிகாலை சிறுத்தைக்காக வைக்கப்பட்டிருந்த கூட்டில், சிறுத்தை சிக்கிய நிலையில் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

பொதுமக்களின் முயற்சியால் பிடிக்கப்பட்ட சிறுத்தையை பார்வையிட்ட அதிகாரிகள், சிறுத்தையை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு சென்று விடுவதற்காக மீட்டுச் சென்றனர்.

இதேவேளை, பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் உயிராபத்தினை ஏற்படுத்தும் சிறுத்தைப்புலியை பிடித்த மக்களுக்கு நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் நன்றியும் தெரிவித்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!