மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸாரால் சட்டவிரேதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உழவு இயந்திரத்துடன் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள பாவற்கொடிச்சேனை எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரேதமான முறையில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் மண் ஏற்றிக்கொண்டிருந்த வேளையில் குறித்த நபரையும் உழவு இயந்திரத்தையும் தாம் கைதுசெய்து பொலிஸ் நிலையம் கொண்டுவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (சி)