ஷாபியின் அடிப்படை உரிமை மனு ஒத்திவைப்பு!!

இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோமானது என்று உத்தரவிடக் கோரி குருணாகலை வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரரான வைத்தியர் சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, குறித்த மனுவை திருத்தம் செய்வதற்காக ஒரு நாள் கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் குறித்த மனுவை திருத்தம் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை 27 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மனுதாரரான குருணாகலை வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி குறித்த மனுவில் சட்டவிரோதமாக சொத்து சேகரித்தமை மற்றும் கருத்தடை சத்திர சிகிச்சை செய்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குருணாகல் பொலிஸார் தன்னை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையாற்றது எனவும் இதனால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!