மட்டு – பதுளை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு பதுளையை இணைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி பணிகள் தற்போது மட்டக்களப்பில் இருந்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துவரும் செங்கலடி பதுளை வீதி புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்துமாறு பிரதமரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மகாஓயாவில் குறித்த வீதி அபிவிருத்தி பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பித்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த வீதியை புனரமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க சவூதி அரசாங்கம் இதற்கென 2837 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது.

தற்போது இந்த வீதி புனரமைப்பு பணிகள் செங்கலடி பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வீதியில் உள்ள சிறிய பாலங்கள் புனரமைக்கப்பட்டு வீதியை காபட் இடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் கண்டி போன்ற இடங்களுக்கு மிகவும் குறைந்த நேரத்தில் சென்று தமது கடமைகளை பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.(மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!