கிளிநொச்சி ஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தேடப்படும் ஒருவர் புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு ஊடகவியலாளர் நிபோஜனிடம் உரையாடியது தொடர்பிலேயே அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் பயன்படுத்தும் தொலைபேசி சிம் அட்டை அவருடைய தந்தையாரின் பெயரில் உள்ளமையால், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக அவரது தந்தையாரை கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தருமாறு, கிளிநொச்சி அலுவலகத்தின் ஊடாக அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் இன்று கொழும்பிற்குச் சென்ற ஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (மு)