நீர்கொழும்பில் பதற்றம்:வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன

நீர்கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து அங்குள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு மர்மநபர்கள் சிலர் சேதம் விளைவித்தமையை கண்டித்து அப்பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தினால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது,
இதனால் அதிகளவிலான படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அப்பகுதியிலுள்ள முஸ்லிம் கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாமென்ற அச்சம் காரணமாக அக்கடைகளை மூடுமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ள நிலையில், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!