யாழ் வடமராட்சியில் தொடரும் கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி, கொடிகாமம் – கச்சாய் பகுதியில் 31 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதியில் நேற்றிரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 31 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையின் புலனாய்வு அதிகாரிகள் குறித்த கஞ்சாவை கைப்பற்றி கொடிகாமம் பொலிசில் ஒப்படைத்ததாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

எனினும் சந்தேகநபர் குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 60 இலட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(மா)

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!