கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை நேற்று மேற்கொண்டார்.
111 மில்லியன் ரூபா செலவில் 40 கடைத் தொகுதிகளுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம், கடந்த 2017ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் கண்கானிப்பு விஜயமாக நேற்று பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது, பொருளாதார மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட 40 கடைத் தொகுதிகளில் 4 கடைகள் மாத்திரமே தற்போது இயங்கி வருவதை அவதானித்த ஆளுநர், இது தொடர்பில் கவனம் செலுத்தி, பொருளாதார மத்திய நிலையத்தை மாற்றுத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியுமா? என ஆராய்வதாக தெரிவித்தார்.(மா)