கொழும்பு சர்வதேச நிதி நகரம் நிர்மாணிக்கப்படும் நிலப்பரப்பு இலங்கைக்கு உட்பட்ட நிலப்பரப்பாகப் பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
கொழும்பு சர்வதேச நிதி நகரம் நிர்மாணிக்கப்படும் நிலப்பரப்பு இலங்கைக்கு உட்பட்ட நிலப்பரப்பாகப் பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்படவுள்ளதாக, இந்தத் திட்டத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் தலைமை அதிகாரி கஸ்யப்ப செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகள் 2023ம் ஆண்டில் நிறைவடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
காணிகளை நிரப்பும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதுடன், 3 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக கடல் நீர்த் தடை நிர்மாணிப்பதில் 99 சதவீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும், நிதி நகரத்தின் நிரமாணப் பணிகளுக்காக 130 கோடி அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் திட்டத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.(மா)