நல்லூர் கந்தன் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் பக்தர்கள் பலரும் பங்கேற்று முருகப் பெருமானைத் தரிசித்தனர்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து மகோற்சவப் பெருவிழா 25 தினங்களுக்கு நடைபெறவுள்ளது.
நல்லூர் கந்தனின் மகோற்சவப் பெருவிழாவில், எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற்று, எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவத்துடன் மகோற்சவம் நிறைவுபெறவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, ஆலய வளாகத்தில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் சோதனையின் பின்னரே வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றர்.

இந்நிலையில், இன்றைய கொடியேற்றத் திருவிழாவில் பக்தர்கள் பலரும் பங்கேற்றிருந்த நிலையில், கடந்த வருடங்களில் பங்கேற்கும் பக்தர்களின் அளவைவிடக் குறைந்தளவிலேயே பக்தர்கள் ஆலய மகோற்சவத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, நல்லூர் ஆலய மகோற்சவம், எமது ஓம் தொலைக்காட்சியில் அனைத்துத் தினங்களும் நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்படுவதுடன், நல்லூர் ஆலய வளாகத்தில் எமது விசேட கலையகமும் அமைக்கப்பட்டுள்ளது.

விசேட கலையகத்தில் தினந்தோறும் ஆன்மீகம் சார் நிகழ்ச்சிகள் நடாத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(மா)

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!