இன்று மாலை பிரதமர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்குவார்

ஏப்ரல்21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இன்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகி சாட்சி வழங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை 6 மணி அளவில் அவரது சாட்சிப் பதிவு இடம்பெறும் என்று தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ராஜாங்க அமைச்சர் ருவாண் விஜவர்தனவும், சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சர்களாக பதவி வகித்திருந்த சாகல ரத்நாயக்க, மத்தும பண்டார போன்றவர்களும் இன்று சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்கு ஜனாதிபதியை அழைப்பது குறித்து இன்றையதினம் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!