ஜனாதிபதி சிறிசேன தனது ஆட்சிக்காலத்தை நீடிக்க மாட்டார் : தேசப்பிரிய

எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நகர்வுகள் மற்றும் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள தாமதங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தனது ஆட்சிக்கால எல்லை குறித்து, நீதிமன்ற ஆலோசனையை வினவுவதென்றால், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கேட்க வேண்டும்.

ஆனால் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தை நீட்டிக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நவம்பர் மாதம் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.

ஜனாதிபதி தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதில் எந்த சிக்கல்களும் வரப்போவதில்லை.

பாராளுமன்றத்தில் யோசனை ஒன்று கொண்டுவரப்பட்டு மூன்றில் இரண்டு ஆதரவுடன் அதனை நிறைவேற்றிக் கொண்டால், தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலை நடத்த தயாராகும். கடந்த மாதம் ஜனாதிபதி என்னை அழைத்து இது குறித்து பேசினார்.

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல்களுக்கு செல்ல தயாராக வேண்டும் என்று கூறினார். இப்போது அதற்கு தயாராக வேண்டும். ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் காலம் உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

அரசியல்வாதிகளுக்கு இது சிறிய காலமாக இருந்தாலும், எமக்கு இது பாரிய கால எல்லையாக உள்ளது.
ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், மாகாண சபை தேர்தலை நடத்தினால் ஆரோக்கியமானதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!