முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கூட்டத்தை ஒளிப்பதிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம், இன்று நடைபெற்றது.
ஊடகவியலாளர்கள், கூட்டத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஒளிப்பதிவு செய்ய முடியும் எனவும், கூட்டத்தின் போது இருந்து எழுத்து மூலம் செய்தி சேகரிக்க முடியும் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார். (சி)