உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய அமைச்சர்!

இலங்கை திரையுலக சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படுபவரும், பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ரஞ்ஜன் ராமநாயக்க, 38 வருடங்களுக்குப் பின்னர், இன்று கல்விப் பொதுத் தரா தர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

அமைச்சராக பதவி வகித்து வரும் சிங்கள நடிகர் ரஞ்சன் ராமநாயக்க, கொழும்பில் உள்ள ஆனந்தா மகளிர் வித்தியாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில், பரீட்சை எழுதியுள்ளார்.

பரீட்சையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க, சட்டத்தரணி கற்கைகளைக் கற்று, நீதிமன்றத்தில் பணம் இல்லாமல் நீதி கோரி இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதே, தனது ஒரே நோக்கம் என தெரிவித்தார்.

‘ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் இருந்தார்கள். மிகவும் பரிசுத்தமாக, ஒழுக்கமான இன்றைய பரீட்சைக்கு சமூகமளித்தேன்.

இன்றையதினம் 50 கேள்விகள் அடங்கிய பரீட்சைத் தாளினை எதிர்கொண்டேன். எனக்கு இருக்கின்ற வழக்குகள் மற்றும் அமைச்சு பணிகளுக்கு இடையே, இன்றைய பரீட்சைக்கு சமூகமளித்தேன். அதற்கான அனுமதியை நீதிமன்றமும் வழங்கியது. நாளையதினம் கத்தோலிக்கத் திருமறை பரீட்சை நடைபெறவுள்ளது.

இன்று அநேக மாணவர்கள், உயர் தரத்திற்குப் பின்னர், முச்சக்கர வண்டிகளை செலுத்தவும் போதைப்பொருள் விற்பனை செய்யவும் முயற்சிக்கின்றனர்.

எனது வாழ்க்கையை பார்த்து அவர்களும் திருந்துவதற்கான வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன்.

நான் இதற்கு முன்னர் உயர் தரம் செய்த போது, எனக்கு சிங்களப் பாடத்தில் அதிகுறைந்த சித்தியே இருந்தது.

ஆகவே எனக்கு சட்டக் கல்லூரிக்கான அனுமதியை பெறவே, இப்போது மீண்டும் உயர் தரப் பரீட்சையை செய்கின்றேன்.

இன்று பணம் உள்ள பலருக்கும் நீதித்துறையில் பல்வேறு வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றன.

ஆனால், தினமும் உணவுக்கே வழியில்லாத பலர், நீதிமன்றத்தில் பணம் செலுத்த முடியாத பலர் விதிவிலக்காகி விடுவதால், அவர்களுக்கு உதவி செய்யவே நான் சட்டத்தரணிக்கான கற்றைகளை ஆரம்பிக்கவுள்ளேன். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!