சிறு பிக்குகளுக்கு எச்.ஐ.வி : அமைச்சர் ரஞ்ஜன் பரபரப்புத் தகவல்!

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும், அமைச்சுப் பதவியில் இருந்தும் நீக்கினாலும், பௌத்த சிறுவர் பிக்குகள், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது தொடர்பாக, நீதிக்காக குரல் கொடுக்க தயார் என, பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டார்.

‘புண்ணியச் சோறு சாப்பிடுகின்ற பல்வேறு பௌத்த பிக்குகள், இன்று கற்றலுக்காக வருகின்ற பௌத்த சிறார் பிக்குகளை, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகின்றனர்.

இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கின்ற 7 சிறுவர் பிக்குகள், தற்போது எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகிய நிலையில், சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த பல காலங்களாக, எனக்கு இந்த விடயம் குறித்து, பல்வேறு பாதிக்கப்பட்ட தரப்பினரும் முறைப்பாடுகளை செய்து வந்தனர்.

இயலாத கட்டத்திலேயே, நான் தற்போது அவற்றை அம்பலப்படுத்தி விசாரணைக்கு அழுத்தம் பிரயோகிக்கின்றேன்.

இதன் காரணமாக, என்னை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும், அமைச்சுப் பதவியில் இருந்தும் நீக்குமாறு அழுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் பிரயோகித்து வருகின்றனர்.

அவ்வாறு கட்சியில் இருந்து என்னை நீக்கினாலும், ஒரு சினிமா நடிகராக நான் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதிக்கோரலுக்கான குரலை எழுப்பி வருவேன்.

என்னிடம் முறையிட்ட பல்வேறு சிறுவர் பிக்குமார்களுடைய பெற்றோரிடம், ஏன் என்னிடம் இதனை முறையிடுகிறீர்கள், முறையிட விசாரணை செய்கின்ற பகுதிகளுக்குச் சென்று முறையிடலாமே என வினவியிருக்கின்றேன்.

அதற்கு அவர்கள், பல தடவை அவ்வாறு முறையிட்டிருந்தாலும் நீதி கிடைக்கவில்லை என்று சொன்னார்கள்.
எனவே, சிறுவர் பிக்குகளுக்கு நடந்த கொடுமைகளுக்கான ஆதாரங்கள், காணொளிகள், தொலைபேசி உரையாடல்கள் எனப் பல வைத்திருக்கின்றேன்.

விசாரணை நடத்தப்படும் போது அவற்றை அம்பலப்படுத்துவேன்’. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!