யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 8 வயது சிறுமி பலி!

பதுளை மஹியாங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பல்ல, குடாவௌ பகுதியில், யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சிறுமியின் பாட்டி பலத்த காயங்களுடன், மஹியாங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில், மஹியாங்கனை குடாவௌ பகுதியை சேர்ந்த 8 வயதுடைய ஷாலிக மதுஷானி உயிரிழந்துள்ளார்.

யானை ஒன்று வீடொன்றை உடைத்துக் கொண்டு சென்றதில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மஹியாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!