மட்டு, போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் தேவைப்படுகின்ற அத்தியாவசிய மருந்து வகைகளின் தட்டுபாடு தொடர்பாக தெரியப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் கே.எம்.ரூபராஜன் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின் வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் சி.வி.கால்லகே தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகளின் வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பனிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் மாவட்டத்தில் உள்ள ஆதார வைத்தியசாலைகளிலும் நோயாளிகளுக்கான அத்தியாவசியமான மருந்து வகைகள் அதிகமாக தட்டுபாடு நிலவுவதாக தெரிவித்தனர்.

இது தொடர்பான அமைச்சிக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்ட போதிலும் இதற்கான எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவே இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பை இன்று ஏற்பாடு செய்ததாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!