புதிய உணவுக் காளான் வர்க்கம் அறிமுகமும், அதன் உற்பத்தி மற்றும் உணவு தயாரிப்பு தொடர்பிலான செய்முறைப் பயிற்சி அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் மத்திய நிலைய கூட்ட மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் மத்திய நிலைய பொறுப்பு போதனாசிரியரும், பண்ணை பயிர்ச் செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தருமான ஏ.எச்.ஏ.முபாறக் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிக் கருத்தரங்கில் மகளிர் விரிவாக்கற் பிரிவின் பாடவிதான உத்தியோகத்தர் ஜீவிதா சிந்துஜன் பிரதம வளவாளராகக் கலந்து சறிப்பித்தார்.
விவசாயிகள் மற்றும் பயிர்ச் செய்கையாளர்கள், பண்ணையாளர்களுக்கு பல்வேறுபட்ட பயிற்சிகள், வழிகாட்டல் கருத்தரங்குகள், உதவிகளை வழங்கி வரும் அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக புதிய காளான் வர்க்க அறிமுகம் காளான் உணவு தயாரிப்பு பயிற்சியும் இடம்பெற்றது.
கடந்த காலங்களில் இலங்கiயில் வர்த்தக ரீதியாக ஒயிஸ்டர் காளான் மாத்திரமே பயிரிடப்பட்டு வந்தது. உயர் தரத்திலான புதிய காளான் வர்க்கத்தின் தேவை உணரப்பட்டதாலும், அதற்கான கேள்வி அதிகமாக இருந்ததனாலும் மாகந்துர வைட் காளான் வர்க்கம் தற்போது விவசாயிகள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வின் இறுதியில் காளான் பயிர்ச் செய்கை தொடர்பான கைநூல் வழங்கி வைக்கிப்பட்டன. (சி)