நாளை ஆரம்பமாகவுள்ள, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில், பக்த அடியார்கள், சோதனை நடவடிக்கையின் பின்னர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இதற்காக சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதனால், பக்த அடியார்கள், அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபட முடியும் எனவும், யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார்.
இன்று மாலை, யாழ்ப்பாணம் மாநகர சபையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
25 நாள் திருவிழாவும், சிறப்பாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், யாழ். மாநகர சபை முதல்வர் குறிப்பிட்டுள்ளார். (சி)