யாழில் இராணுவச் சோதனைச் சாவடிகள்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில், விசேட இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன், சில இடங்களில் அடையாள அட்டை இலக்கமும் பதிவு செய்யப்படுகின்றன.

அதனடிப்படையில், யாழ்ப்பாணம் மாநகர எல்லையில், கொழும்புத்துறை பிரதான வீதி, ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதித்தடை போடப்பட்டு, சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றன.

கொழும்புத்துறைப் பகுதியில் சோதனையிடப்படுவோரின் அடையாள அட்டை இலக்கமும் பதிவு செய்யப்படுவதாக, பொது மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலை அடுத்து, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!